‘ஜெகமே தந்திரம்’எனும் குப்பைப் படத்தைக் கொடுத்து ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டவர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. அத்துடன், போலீஸ் அதிகாரியாக துருவ் விக்ரம் நடிக்க, தாதாவாக வில்லத்தனம் காட்டுகிறாராம் விக்ரம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் மூன்று கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறார். வரும் கிறிஸ்மஸ் தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதற்குள் படம் தயாராகிவிடுமா என்பது குறித்த தகவல்கள் இல்லை. அதோடு, படத்துக்கான ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இன்று வெளியானது. படத்துக்கு ‘மகான்’என தலைப்பு வைத்துள்ளனர். இதில் விக்ரமுக்கு கொம்பு முளைத்துள்ளது. ‘மகான்’ படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்கள் வரிசையில் இருந்து வருகின்றன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    