free website hit counter

மீண்டும் ஒரு மொக்கையுடன் வரும் கார்த்திக் சுப்புராஜ்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனுஷ் நடித்துவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வாங்கிக் கட்டிக்கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,

அதில் செய்த அவதூறுகளை கொஞ்சம் சமன் செய்ய முயற்சிப்பதுபோல் ‘நவரசா’ ஆந்தாலஜியில் ‘பீஸ்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவொருபக்கம் இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’பூமிகா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் முந்தைய தயாரிப்பும் ஒரு பெண் மையப் படமாகவே இருந்தது. அந்தப் படம் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘பெங்குயின்’. ஆனால் படம் பெரும் மொக்கையாக இருந்ததால் அதை ரசிகர்கள் நிராகரித்தனர். டாரண்டிலும் அதை யாரும் சீண்டாத நிலை ஏற்பட்டதாக வீடியோ திருடர்கள் திட்டினர். தற்போது அதேபாணியில் ‘பூமிகா’ படத்தின் ட்ரைலரும் அடுத்த மரண மொக்கையை கார்த்திக் சுப்புராஜ் கொடுக்கிறார் என சமூக வலைதளங்கள் கூறுகின்றனர். இதைச் சொல்வதுபோல் உள்ளது பூமிகா படத்தின் ட்ரைலர். ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் வீட்டில் பேய் ஒன்று இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீர் திடீரென மர்மமான படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து விசாரணை செய்யும் பூமிகா என்ற கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்தாரா. இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். சமீபத்தில் வெளியான ‘திட்டம் இரண்டு’ படத்திலும் இதேபோல் கதாபாத்திரம் ஏற்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ். அதுவும் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ரதீந்திர பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 22-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: