free website hit counter

தலைப்பை அதிரடியாக மாற்றிய கௌதம் மேனன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’திரைப்படம்.

தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளது இருவரது ரசிகர்கள் மத்தியிலு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கு முதலில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயர் வைத்தனர். பணிகள் தொடங்கப்பட்டு நடந்துவந்த நேரத்தில்தான் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம். மைக்கேல் ராயப்பனுக்கு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டமான 10 கோடியைக் கொடுக்கவேண்டும் என்று ‘ரெட் கார்டு’ போட்டனர். இந்தப் பிரச்சினை தற்போது சுமூகமாக பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பு ராசியில்லையோ என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டதால், இந்தப் படத்தை தயாரிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஐசரி கணேஷ் தலைப்பை மாற்றச் சொல்லிவிட்டாராம்.

இதனால் தற்போது படத்துக்கு தலைப்பை மாற்றியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியராக தாமரை அமர்த்தப்பட்டுள்ளார். பணிபுரிந்து வந்தார்கள். இன்று திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. திருச்செந்தூரில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சிம்புவுடன் புதுமுகக் கதாநாயகி ஜோடி சேர இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: