free website hit counter

மொத்தமாக அமேசானுக்கு படங்களை விற்ற சூர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி தளத்துக்கு விற்ற காரணத்துக்காக திரையுலகில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவர் சூர்யா!

ஆனால், அந்தப் படம் அமேசானில் 15 நாட்களில் 20 மில்லியன் பார்வையாளர்கள் எட்டி சாதனை படைத்தது. தற்போது கோரோனா பெருந்தொற்று முடியாத நிலையில் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் ஓடிடிக்கு அதிரடியாக விற்பனை செய்துவிட்டார். அவற்றில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படமும் அடக்கம்.

இதை அதிகாரபூர்வமாக அமேசான் பிரைம் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: