free website hit counter

அமீர்கான் மனைவியை பிரிந்தார் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலிவுட்டின் முன்னனிக் கதாநாயகனும் மாற்றுத் திரைப்படங்களின் ஆர்வலருமான அமீர்கானும் பாலிவுட்டில் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த கிரண் ராவும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இத்தம்பதியர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதாக இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் வழியாக அறிவித்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்ற அனுபவங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியும் சிரிப்பும் கூடிய நிறைவைப் பகிர்ந்து கொண்டோம், எங்கள் தாம்பத்திய வாழ்க்கையானது ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பால் மட்டுமே நிறைந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம் - இனி கணவன்-மனைவியாக அல்ல, ஆனால் ஒருவருக்கொருவர் இணை பெற்றோராக எங்கள் மகனுக்கான எல்லா கடமைகளிலும் இணைந்திருப்போம்.”என்று அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அமீரும் கிரணும் மேலும் அந்த அறிக்கையில்: “நாங்கள் சில காலத்திற்கு முன்பு வெறுமை மற்றும் பிரிவை உணர்ந்தோம். இப்போது இந்த விவாகரத்து ஏற்பாட்டை முறைப்படுத்திக் கொள்வதை சட்டத்தின் வழியான வசதியாக உணர்கிறோம், தனித்தனியாக வாழ்வது, ஆனால் எங்கள் அன்பு மகனுக்கான குடும்பம் செய்ய வேண்டிய கடமைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக நாங்கள் இருக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction