free website hit counter

சிவாஜிக்கு நவராத்திரி.. கமலுக்கு தசாவதாரம்.. விக்ரமுக்கு ‘கோப்ரா’!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறவினரான சியான் விக்ரம், தற்போது ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய வருகிறார். இதில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகளும் முடிந்துவிட்டன. சென்சாருக்கு அனுப்ப இருந்த வேளையில் கொரோனா இரண்டாம் அலை வந்து தடுத்துவிட்டது. ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோப்ரா படப்பிடிப்பு தளத்தில் சீயான் விக்ரமும் இயக்குனரும் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பிரபமாகியுள்ளது. அதில் சியான் விக்ரம் வயதான தோற்றத்தில் இருக்கிறார். அவர் ஒரு வெளிநாட்டினர் தோற்றத்தில் ஒருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த சியான் விக்ரமின் ரசிகர் ஒருவர் ‘சிவாஜிக்கு நவராத்திரி.. கமலுக்கு தசாவதாரம்.. விக்ரமுக்கு ‘கோப்ரா’!’ என்று எதிர்வினை செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: