விஷால் நடிப்பில் கடைசியாக ‘சக்ரா’ திரைப்படம் வெளியானது. தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார்.
படத் தயாரிப்புக்காகப் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரியிடம் கடன் வாங்கியிருந்தாராம் விஷால். அதற்கு பிணையாக தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில நில ஆவணங்களாக அளித்து பல லட்சங்களைக் கடனாகப் பெற்றுள்ளார். பிறகு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் பத்திரங்களைத் திருப்பித் தராமல் ஆர்.பி.சௌத்ரி தரப்பில் இழுத்தடிப்பதாக அவர் மீது காவல் நிலையத்தில் மோசடிப் புகார் அளித்துள்ளார் நடிகர் விஷால்.
அந்த ஆவணங்கள் ஆர்.பி.சௌத்ரியின் முன்னாள் மேலாளரின் பொறுப்பில் இருந்ததாகத் தெரிகிறது அவர் சில மாதங்களுக்கு முன் அவர் முதல் அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமாகிவிட்டார். எனவே அந்த ஆவணங்கள் தற்போது எங்கே இருக்கிறது என்பது தெரியாததால் தமாதம் ஆகி வருவதாகத் தெரிகிறது. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என சௌத்ரி வட்டாரத்திலிருந்து தகவல். விஷாலும் அவருடைய அப்பாவும் பதட்டம் காரணமாக இப்படி அவசரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார்கள். எது உண்மையோ.. விரைவில் தெரிந்துவிடும்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    