தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார் ஸ்ருதி ஹாசன்.
அந்த அனுபவத்தில் தற்போது அமேசன் தளத்துக்காக, அதே போன்றே கலந்துரையாடல் நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கிட, அதைத் தற்போது படமாக்கி வருகிறார்கள். அவர் தமிழில் நடித்துள்ள ‘லாபம்’ படத்துக்கு அவர் இன்னும் டப்பிங் பேசவில்லை.
இதுவொரு பக்கம் இருக்க கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல், பாகுபலி நாயகன் பிரபாஸை இயக்குகிறார். ‘சலார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தெலுங்குப் படத்தில் பிரபாஸுடன் இணைந்து முதல் கட்டப் படப்பிடிப்பில் நடித்து முடித்திருக்கிறார். முதல் முறையாக இந்தத் தெலுங்குப் படத்தில் சொந்தமாக டப்பிங் பேச இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சொந்தமாக தெலுங்கில் பேச 10 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதுவொரு பக்கம் இருக்க, ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷராஹாசன் முதல் முறையாக திரைக்கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதை தந்தையுடன் விவாதிக்க இருந்த நேரத்தில் தேர்தல், கொரானா, கட்சியில் குழப்பம் என ஏற்பட்டுவிட்டாதல் அப்பா அழைக்கும்வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்துள்ளாராம். இந்தக் கதையில் ஸ்ருதிஹாசன் - நானி இருவரையும் நடிக்க வைப்பது என்றும் தெலுங்கு தமிழில் உருவாக்குவது என்று முடிவு செய்திருப்பதாக ஸ்ருதிஹாசன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்பதையும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.