free website hit counter

கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கமல் தன்னை வசூல் நாயகனாக நிலை நிறுத்திக்கொள்ள உதவிய இயக்குநர்களில் முக்கியமானவர் ஜி.என்.ஆர். என அழைக்கப்படும் ஜி.என்.ரங்கராஜன்.

அவருடை இயக்கத்தில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா , கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கமல் நடித்திருந்தார். இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை 8.45 மணி அளவில் மாரடைப்பினால் காலமானார் அவருக்கு வயது 91 இவரது மனைவியின் பெயர் சக்குபாய் 82 வயது. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்.

மகன் ஜி.என். குமாரவேலன் இவரும் திரைப்பட இயக்குனராக இருக்கிறார்.ஆடுகளம் நரேன் நடித்த ஹரிதாஸ், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, வாகா ஆகிய படங்களை இயக்கியவர் - இப்பொழுது அருண்விஜய் நடிக்கும் சினம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மகளுடைய பெயர் பரமேஸ்வரி இதற்கான இறுதி சடங்குகள் நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறவிருக்கிறது.மறைந்த முதுபெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் இறுதிச்சடங்கு சென்னை, நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction