தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பெருந் தோறறு நோயின்பு புதிய மரபு திரிபு வைரஸ் ஓமைக்ரான் பரவி வரும் நிலையில் சென்னை சர்வதேச படவிழா தொடங்க இருக்கிறது.
சென்னை சர்வதேச படவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடக்கும். கடந்த 2003ஆம் ஆண்டு தான் இவ்விழா ஆரம்பிக்கப்பட்டது.
முதன் முதலாக ஆரம்பிக்கின்ற பொழுது இரண்டே திரையரங்கம் 17 நாடுகளைச் சார்ந்த 63 படங்களைத் திரையிட்டார்கள். இதை ஏற்பாடு செய்தவர்கள் இந்தோ சினி அப்பிரேசியேஷன் பவுண்டேஷன் திரைப்பட சங்கம் இதை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.
அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இந்த ஆண்டு (2021) சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 53 நாடுகளிலிருந்து 121 படங்கள் திரையிடுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி கொடுத்தது.. இந்தாண்டு 1 கோடி கிடைக்கும் என்று மேற்படி விழாக் குழு எதிர்பார்க்கிறாரகள்.. அதே சமயம் இப்படி தனி அமைப்பினருக்கு நிதிக் கொடுத்து அவர்கள் முறையான கணக்கேதும் காட்டாத நிலையில் நம் இயக்குநர் சங்கம் அல்லது புரொடியூசர் கவுன்சில் பொறுப்பேற்று இம்மாதிரியான விழாகளை நடத்த வேண்டும் என்கிற முணுமுணுப்பும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
19 வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னையில் புகழ்பெற்ற சத்யம் சினிமாஸ் - பிவிஆர் லிமிடெட் மற்றும் எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய இடங்களில் இந்த திரைப்பட விழாவினை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வருகிது.. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னையில் புகழ்பெற்ற சத்யம் சினிமாஸ் - பிவிஆர் லிமிடெட் மற்றும் எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய இடங்களில் இந்த திரைப்பட விழாவினை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வருகிது.
இம்முறை ராமநாராயணனின் மகன் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான முரளி சென்னை சர்வதேச பறவை கைப்பற்ற நினைத்தால் அது நடக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை வழக்கம்போல் இண்டோ பிலிம்ஸ் இன் ஒப்ரேஷன் பவுண்டேஷன் 19வது சென்னை சர்வதேச பட விழாவை நடத்துகிறது.
தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் பூமிகா,கர்ணன்,மாறா,சேத்துமண்,தேன்,உடன்பிறப்பே உள்ளிட்ட 11 படங்கள் இடம்பெற்றுள்ளன.
-4மீடியாவுக்காக:மாதுமை