free website hit counter

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மீது 15 கோடி மோசடிப் புகார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation)

என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது.

இவரது நிறுவனத்தை அணுகியிருக்கிறார்   தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவரும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரும் மறைந்த முன்னாள் இயக்குநர் இராம.நாராயணனின் மகனுமான முரளி ராமசாமி. இவர் தன்னிடம் , ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ , ராகவா லாரன்ஸின்  ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷ் நடித்திருந்த பிரெஞ்சு ஆங்கிலப் படமொன்றின் தமிழ் டப்பிங் படமான ‘நான் ருத்ரன்’  ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை  இருப்பதாக கூறி, அவற்றை  மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்  தருவதாக கூறி, அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார் முரளி ராமசாமி. அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் பொய் கூறி, நம்ப வைத்து பணத்தைப் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து முரளி ராமசாமியின் மீது சென்னை பெருநகரப் போலீஸார் மோசடிப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்துள்ள முதல் தகவல் அறிக்கையானது ஊடகங்களுக்கு அனுப்பட்டது, இதையடுத்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்ததுடன், அலட்சியமாகவும் முரளி ராமசாமி பதிலளித்ததுடன். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இந்த நிலையில்தான் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை பெருநரகக் காவல் துறையில் புகார் அளித்து,  தேவையான ஆதாரங்களை கொடுத்ததையடுத்தே அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் காவல் செய்தித்தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரே இப்படி நடந்துகொண்டாரா என்பது குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction