அவசர பயன்பாட்டு பட்டியலில் இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்த தடுப்பூசி இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசியாக கொண்டுவர உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதன்போது தடுப்பூசிக்கான கூடுதல் தரவுகளை உலக சுகாதார அமைப்பு கோரிவந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமும் கூடுதல் தரவுகளை அளித்து வந்தது.
இதனையடுத்து அவசர பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு சேர்த்து அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.