இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தனது உள்நாட்டு டி20 லீக், லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) க்கான வீரர் பதிவை திங்கட்கிழமை (ஜூன் 21) தொடங்கி ஜூன் 28 வரை தொடரும்.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை திட்டமிட்டபடி போட்டியின் இரண்டாம் பதிப்பை முன்னெடுப்பதாக எஸ்.எல்.சி சமீபத்தில் அறிவித்து, நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற சந்தேகத்தை நீக்கியது.
ஹரி டிவியுடன் பேசிய எல்பிஎல் போட்டி இயக்குனர் ரவின் விக்ரமரத்ன, லங்கா பிரீமியர் லீக்கின் (எல்பிஎல்) இரண்டாம் பதிப்பு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை திட்டமிடப்பட்டப்படி ஹம்பாந்தோட்டாவில் நடைப்பெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
"இடத்தைப் பொறுத்தவரை, நாங்கள் முன்னதாக மூன்று இடங்களில் போட்டிகளை நடத்த விரும்பினோம், ஆனால் இப்போது நாங்கள் அந்த நிலைப்பாட்டை மாற்றி, கடந்த ஆண்டைப் போலவே ஹம்பாந்தோட்டாவில் நடத்த முடிவு செய்துள்ளோம், இதனால் பாதுகாப்பான உயிர் குமிழி இருக்க முடியும்," விக்ரமரத்ன கூறினார்.
Comments powered by CComment