counter create hit 2020ஆம் ஆண்டில் டிக்டோக் நிறுவனத்திற்கு இரட்டிப்பான வருமானம்

2020ஆம் ஆண்டில் டிக்டோக் நிறுவனத்திற்கு இரட்டிப்பான வருமானம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஆண்டு அதிக வருவாய் கண்ட நிறுவனமாக டிக்டோக்கின் பின்னால் உள்ள சீன நிறுவனமான பைட் டான்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஸ்மாஷ்-ஹிட் வீடியோ பயன்பாடான டிக்டோக் நிறுவனத்தின் மொத்த வருவாய் 2020 ஆம் ஆண்டில் 111% அதிகரித்து .3 34.3bn (. 24.7bn) ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் தொடர்ச்சியான பிரபலத்தை டிக்டொக் பெற்றுவருவதை இந்த தரவுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

எனினும் பைட் டான்ஸ் அதன் வருடாந்திர மொத்த இலாபம் 93% அதிகரித்து 19 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ள போதும் 45 பில்லியன் டாலர் நிகர இழப்பையும் பதிவு செய்தது. இது உலகெங்கிலும் உள்ள சில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு பைட் டான்ஸ் மற்றும் பல சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆளாகியுள்ள காரணங்களை சுட்டிகாட்டுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி சுமார் 1.9 பில்லியன் மாதாந்திர செயலில் பயனர்களை பைட் டான்ஸ் நிறுவனம் சார்ந்த தளங்கள் தன்வசம் வைத்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula