இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிம்பும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.
இந்த போஸ்டரில் அழுக்கு லுங்கி, சட்டையுடன் சிம்பு மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அசந்து போனார்கள். இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.
இதற்காக ஆறு மாதங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியிருக்கிறார் சிம்பு. அத்துடன் இந்த 6 மாத காலமும் முட்டைக்கோஸ் அவித்தது, சாத்துகுடி பழம், கொள்ளுத் துவையலுடன் ஓட்ஸ் கஞ்சி. வெங்காயம் வெள்ளரிக்காய் சாலாட், அரிசிப் பொறி கலந்த தட்டைப் பயிறு சுண்டல் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இவற்றைப் பரிந்துரைத்த அவருடைய உணவுக் கட்டுப்பாட்டாளர் 6 மாத காலமும் அவருடடே தங்கியுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதே பெயரில் ஈழத் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களில் ஒருவரான மதிசுதா ஒரு திரைடம் எடுத்துள்ளமையும் சர்ச்சையாகி வருகிறது.
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை
Comments powered by CComment