இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக, கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். 80 வயதாகும் மெட்டரல்லாவின் தெரிவு, இத்தாலியில் பலவாரங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய 505 வாக்குகளைப் பெற வேண்டிய நிலையில், அவர் 759 வாக்குகள் பெற்று, மீண்டும் ஜனாதிபதியாக பதவி பெற்றார்.
முன்னாள் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதியான அவர் இரண்டாவது முறையாக பணியாற்ற முடியாது என்று பலமுறை நிராகரித்த போதும், இத்தாலியின் சண்டையிடும் அரசியல் கட்சிகள் மற்றொரு சாத்தியமான வேட்பாளரைக் கண்டுபிடிக்கத் தவறியதை அடுத்து சனிக்கிழமை அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவாகினார்.
அவர் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த புதிய ஏழு ஆண்டு பதவிக்காலம் முடிவதற்குள் பதவியிலிருந்து வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்தாலும், 2023 இல் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் காலங்களிகளில் அவர் தலைவராக இருப்பது உறுதியாகியுள்ளது. இது இத்தாலியின் தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்சியுடன் முன்னேற எண்ணும் பிரதமர் டிராகியை சுதந்திரமாக இயங்குவதற்கு வகை செய்யவும்.
80 வயதுச் சிசிலியன் ஆனா அவர், ஏற்கனவே ஐந்து வெவ்வேறு அரசாங்கங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பேரழிவு போது நாட்டை ஒருங்கிணைத்த ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
மேட்டரெல்லா இயற்கையாகவே பக்தியுள்ள கத்தோலிக்கராகவும், அமைதியான முறையில் மிகவும் உறுதியான கொள்கைகளைக் கொண்டுள்ளவராகவும், சட்டத்தின் நாயகனாவும் உள்ளார் என பத்திரிகையாளர் லினா பால்மெரினி கூறினார்.