free website hit counter

ஜேர்மனியைக் கடுமையாகத் தாக்கும் ஒமிக்ரான் அலை !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மனியில் கோவிட் - 19 ஒமிக்ரான் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிய வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 200,000 க்கும் மேற்பட்ட கோவிட்  தொற்றுகளை ஜேர்மன் பதிவு செய்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 203,136 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 188 கோவிட் தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்திருப்பதாக ஜேர்மன் சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயண விதிகள் பெப்ரவரி 1ல் எளிதாகின்றன !

இது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கையின் இரட்டிப்பு எண்களாகக் காணப்படுகின்றன. இன்று வியாழக் கிழமை பதிவாகிய புள்ளி விபரங்கள், 100,000 பேருக்கு 1017.4 கோவிட் தொற்றுகள் என்ற எண்ணிக்கையில், முதன்முறையாக 7 நாள் தொற்றுக்கள் ஆயிரத்தைத் தாண்டியது. Omicron அலை நாட்டை கடுமையாக தாக்கி வருவதைக் கருத்தில் கொண்டு, ஜேர்மன் மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

" வரவிருக்கும் நாட்களில் மற்றும் அடுத்த வாரங்களில் மருத்துவமனைகளில் புதிய சேர்க்கைகள் அதிகரி;பபதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் " என்று ஜெர்மன் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் ஜெரால்ட் காஸ் எதிர்வு கூறியுள்ளார்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 2,663 கோவிட் நோயாளிகளும், 1,311 பேர் ஒக்சிசன் காற்றோட்ட சிகிச்சையும் பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கபடுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction