free website hit counter

சுவிஸ் அரசு, விடுமுறையிலிருந்து திரும்பியவர்கள் நோய் தொற்றினைச் சோதிக்க நினைவூட்டலை அனுப்புகிறது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்கள் கடந்த சில நாட்களில் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தால், நாட்டின் எல்லையைக் கடக்கும் போது உங்கள் தொலைபேசிகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கலாம்.

சுவிஸ் கூட்டாட்சி அரசின் பொது சுகாதாரத்தின் மத்திய அலுவலகம் (FOPH) அனுப்பிய இந்த செய்தியில், நீங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடாதிருந்தால், அல்லது நோயிலிருந்து மீட்கப்படாவிட்டால், உங்களைச் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்துகிறது.

நாட்டிலுள்ள மூன்று முக்கிய மொபைல் நிறுவனங்கள் மூலம், அனுப்பப்படும் இதற்கான செலவினை, அந்த நிறுவனங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்து திரும்பும் தமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த செய்தியை அனுப்புவதாக சன்ரைசும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்தின் போது, அவர்களின் தொலைபேசி நாட்டில் உள்ள ஆபரேட்டரின் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருந்தால் பிரத்தியேகமாக உரை அனுப்புவதாக சாலட்டும் முடிவு செய்திருக்கிறது. இருப்பினும், சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சுவிஸ்காம், தங்கள் வாடிக்கையாளர்கள் பயணத்திலிருந்து திரும்பும்போது இந்த செய்தியை அனுப்புவதில்லைஎன்று முடிவு செய்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கான இலவச சோதனை, செப்டம்பர் இறுதி வரை மட்டுமே இருக்கும். அக்டோபர் 1 முதல் குறைந்தபட்சம் CHF50 ஐ மக்கள் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் சென்ற புதன்கிழமை அறிவித்துள்ளது.

"வைரஸ் இன்னமும் அழிந்து போகவில்லை. அது இப்போதைக்கு இல்லாமற் போகாது என்பது தெளிவாகிறது. ஆதலால் தடுப்பூசி போடப்படாதவர்கள் விரைவில் அல்லது பின்னர் பாதிக்கப்படுவார்கள். புதிய கொரோனா வைரஸ் அலையின் தீவிரம் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அடுத்த சில மாதங்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது பல மருத்துவமனைகளில் இடநெருக்கடியை ஏற்படுத்தலாம். "என்று, சுவிஸ் சுகாதார நிபுணரும், கோவிட் -19 பணிக்குழுவின் தலைவருமான மார்ட்டின் அக்கர்மன் கூறுகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula