ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை விலக்கி வைக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இன்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாக்களிப்பில் 93 வாக்குகள் ஆதரவாகவும், , 24 வாக்குகள் எதிராகவும், வாக்களிகப்பட்டது. 58 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்க ரஷ்யா மேற்கொண்டுள்ளது என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவை புறக்கணித்ததற்கு எதிராக குரல் கொடுத்த நாடுகளில் சீனாவும் முக்கியமானது. "உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே வழி. மனித உரிமை விவகாரங்களை அரசியலாக்குவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் குறிப்பிட்டார். கஜகஸ்தான், வெனிசுலா, சிரியா, வட கொரியா, ஈரான், கியூபா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்தியா, இலங்கை வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் பெரும்பாலான ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.