ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007 தொடக்கம் 2012 வரை பிரதமராகப் பதவி வகித்த குய்லூம் சோரோ என்பவருக்கு அபித்ஜான் நகர நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
குய்லூம் சோரோ தற்போது நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் வசித்து வருகின்றார்.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அரச அமைப்புக்களை இழிவு படுத்தி போலி செய்திகளைப் பரப்பியதற்காக இவர் மீதும் இவரின் 19 ஆதரவாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கின் நியாயமற்ற தீர்ப்பை முழுமையாக நிராகரிக்கின்றேன் என குய்லூம் சோரோ டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவர் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.