free website hit counter

இத்தாலி மே மாத நடுப்பகுதியில் தளர்த்தக் கூடிய விதிகள் எவை ?

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இத்தாலி அதிக ஆபத்துள்ள 'சிவப்பு' மண்டலங்களை குறைத்து மஞ்சள் மண்டலங்களாக மாற்றியுள்ளதால், நாட்டின் பெரும்பகுதிகளுக்கு பல மாத கால தடைகளுக்குப் பிறகு உறவினர்களிடமும், நண்பர்களிடமும், சென்று வரக் கூடிய சுதந்திரத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இவை தவிர இன்னமும் இன்னமும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் மீதமுள்ள விதிகளில் அரசாங்கம் அடுத்து எவற்றினைத் தளர்த்த முடியும்?

வரவிருக்கும் வாரங்களில் நாட்டை மீண்டும் திறப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளது, மேலும் எண்ணிக்கைகள் மேம்பட்டு வந்தால், மேலும் பல தளர்வுகள் அதனுடன் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை!

இத்தாலியின் சுகாதார கண்காணிப்புக் குழு அதன் அடுத்த வார அறிக்கையை வெளியிடும் நாளான மே 14 வெள்ளிக்கிழமை விதிகளை மேலும் தளர்த்துவதாக அறிவிக்க முடியும். அதனை அடுத்த வரும் நாட்களில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

அடுத்த கட்டத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க அரசாங்கம் இந்த வாரம் கூட்டங்களை நடத்துகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அல்லது பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்;

மே 15 முதல் மால்கள் மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் மீண்டும் திறக்கப்படும். தற்போது வார நாட்களில் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஷாப்பிங் மால்கள் மீண்டும் வார இறுதி நாட்களில் திறக்கப்படும் என்று ஏப்ரல் பிற்பகுதியில் அரசாங்கம் தனது கடைசி புதுப்பிப்பில் உறுதிப்படுத்தியது.

லிடோஸ், பீச் கிளப்புகள் மற்றும் வெளிப்புற குளங்கள் மே மாத நடுப்பகுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளன, சில பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன, இதில் அனுமதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் உள்ளன.

மே நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து அல்லது இஸ்ரேலில் இருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் தேவைப்படாது. ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து அல்லது இஸ்ரேலில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு தற்போது ஐந்து நாள் தனிமைப்படுத்தல் உள்ளது. ஆயினும் இதனை இத்தாலி கைவிடும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ, மே 15ம் திகதி அதன் தற்போதைய விதிகள் காலாவதியான பிறகு சர்வதேச பயணத்தை எளிதாக்குவதற்கு அரசாங்கம் விரும்புகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மே 17 ல் ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் மிகவும் பரபரப்பாகக் குறிப்பிடப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒன்று. குறிப்பாக இப்போது உணவகங்கள் இரவு உணவிற்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை இரவு 11 அல்லது நள்ளிரவுக்கு வரை மாற்றுவது மே 17 திங்கள் முதல் நடைமுறைக்கு வரக்கூடிய மாற்றமாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 1ல் ஜிம்கள், உட்புற உணவக சேவை மீண்டும் தொடங்கலாம். மஞ்சள் மண்டலங்களில் மட்டுமே ஜிம்கள் மற்றும் பிற உட்புற உடற்பயிற்சி வசதிகள் திறக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இது விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கும். இதில் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, முடியாத பகுதிகளில் முகமூடிகள் தேவைப்படுவது மற்றும் பயனர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யச் சொல்வது என்பனவாக இருக்கலாம்.
உட்புற நீச்சல் குளங்களும் இதே அடிப்படையில் ஜூன் முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று நம்புகின்றன.

இதே நாளிலிருந்து பார்கள் மற்றும் உணவகங்களும் உட்புறந்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும் . ஆனால் அது அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. இரவு உணவு சேவை வெளியில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதே போல் அரங்கங்கள் 25 சதவீத திறனில் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula