நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் அதிபரையும் தீர்மானிக்க ஜெர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரத்தின் தலைமை ஆபத்தில் உள்ள நிலையில் ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 மில்லியனுக்கும் அதிகமான ஜேர்மனியர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு (06:00 GMT) வாக்குப்பதிவு தொடங்கியது. 18:00 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல் இதுவாகும். அதோடு சான்சலரியில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தனது சகாப்தத்தின் வரையறுக்கும் ஐரோப்பிய தலைவராக மாறிய பெண் ஏஞ்சலா மெர்கல் ஒதுங்கவுள்ளது குறிப்பிடதக்கது.