free website hit counter

கோவிட்-19 தோற்றம் குறித்து மீண்டும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சர்ச்சை!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சீனாவின் வுஹான் நகரில் கோவிட்-19 தோற்றம் குறித்து இந்த வருட முற்பகுதியில் ஏற்கனவே உலக சுகாதாரத் தாபனத்தின் நிபுணர் குழு 4 வாரங்கள் தங்கி ஆய்வு நடத்தி மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதில் கோவிட் தோற்றம் குறித்த அனைத்துக் கருதுகோள்களும் அப்படியே இருப்பதாகவும் உண்மையான காரணம் இன்னமும் கண்டறியப் படவில்லை என்றும் WHO தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தம் காரணமாக இன்னொரு கட்டமாக மீண்டும் வுஹானில் அனைத்து பரிசோதனைக் கூடங்கள் மற்றும் சந்தைகளில் கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு நடத்தத் தயாராகி வருவதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதற்கு சீனா கடும் எதிர் வினையாற்றியுள்ளது. கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்ற கோட்பாடு அறிவியலுக்கு எதிரானது என்றும் இது ஒரு திட்டமிடப் பட்ட புரளி என்றும் சீனா விசனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டு அறிவியலையே சிறுமைப் படுத்துகின்றது என்றும் சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யெக்சின் தெரிவித்துள்ளார்.

கோவிட் தோற்றம் குறித்த 2 ஆம் கட்ட விசாரணை மீதான சீனாவின் இந்த நிராகரிப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், சீனாவில் நிலைப்பாடு பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹாங்கொங் விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சிலர் மீதும், சில நிறுவனங்கள் மீதும் சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. சீனாவின் ஹாங்கொங் வணிக சூழலை அழிக்க உருவாக்கப் பட்ட அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தடைகள் சர்வதேச சட்டத்தையும், உறவுகளையும் நிர்வகிக்கும் அடிப்படை விதிகளை கடுமையாக மீறும் செயற்பாடாகும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction