free website hit counter

கோவிட்-19 போக்குவரத்து சான்றிதழினை அனுமதித்த ஐரோப்பிய யூனியன் சட்ட வல்லுனர்கள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும் புதிய போக்குவரத்து சான்றிதழுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.

இந்தப் புதிய சான்றிதழானது மேலதிக கோவிட் பரிசோதனைகளுக்கான தேவையையும், தனிமைப் படுத்துதலுக்கான தேவையையும் நீக்கி ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான பயணத்தை இலகுவாக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அனுமதி மூலம் ஐரோப்பிய யூனியனின் குடிமக்கள் கோவிட்-19 தொடர்பான டிஜிட்டல் சுகாதார சான்றிதழைப் பெற முடியும் என்பதுடன் இந்தச் சான்றிதழ் அவரது தடுப்பூசி நிலவரம், கோவிட்-19 பரிசோதனை முடிவு அல்லது தொற்றில் இருந்து மீண்டவரா என்பது போன்ற விபரங்களைப் பிரதிபலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த இலவச சான்றிதழை ஸ்மார்ட் போனில் QR குறியீடி மூலம் பதிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லது அச்சுப் பிரதியாக வைத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் இந்த பொறிமுறையைப் பாவிக்கத் தொடங்கியுள்ளன. இந்நாடுகளில் பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஜேர்மனி, கிறீஸ் மற்றும் போலந்து ஆகியவை அடங்குகின்றன. இந்த டிஜிட்டல் சான்றிதழானது எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பரவலாகப் பயன்படுத்தப் பட முடியும் என்பதும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் முக்கியமானது ஆகும். ஆனால் இது ஒரு போக்குவரத்துக்கான அதிகாரப்பூர்வ ஆவணமாகவோ அல்லது சுதந்திரமான இயக்கத்துக்கான ஒரு நிபந்தனையாகவோ கருதப் படாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பிரான்ஸில் சமீபத்தில் தனது 7 கோடி மக்களில் 60% வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப் பட்டிருப்பதால் ஊரடங்கு தளர்வினை அறிவித்துள்ளது. இதன் மூலம் பிரான்ஸில் அனைத்து வகை உணவகங்கள், கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் என்பவை பொது மக்களை நீண்ட இடைவெளிக்குப் பின்பு வரவேற்கத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 175 183 965
மொத்த உயிரிழப்புக்கள் : 3 777 286
குணமடைந்தவர்கள் : 159 002 869
ஆக்டிவ் தொற்றுக்கள் : 12 403 810
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 85 242

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 264 727 : மொத்த உயிரிழப்புக்கள் : 613 494
இந்தியா : 29 183 121 : 359 695
பிரேசில் : 17 125 357 : 479 791
பிரான்ஸ் : 5 725 492 : 110 202
துருக்கி : 5 306 690 : 48 428
ரஷ்யா : 5 156 250 : 124 895
பிரிட்டன் : 4 535 754 : 127 860
இத்தாலி : 4 237 790 : 126 767
ஆர்ஜெண்டினா : 4 038 528 : 83 272
ஜேர்மனி : 3 715 870 : 90 187
ஸ்பெயின் : 3 715 454 : 80 332
கொலம்பியா : 3 635 835 : 93 473
ஈரான் : 2 990 714 : 81 519
போலந்து : 2 876 289 : 74 363
மெக்ஸிக்கோ : 2 441 866 : 229 353
தென்னாப்பிரிக்கா : 1 712 939 : 57 310
கனடா : 1 396 798 : 25 843
பாகிஸ்தான் : 937 434 : 21 529
பங்களாதேஷ் : 817 819 : 12 949
ஜப்பான் : 765 619 : 13 743
சுவிட்சர்லாந்து : 699 339 : 10 851
இலங்கை : 213 396 : 1910
சீனா : 91 337 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction