free website hit counter

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக சுகாதார அமைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியில், இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், திகதிகள் மற்றும் விநியோகப்பட்டியல்கள் WHO அலுவலகத்தினால் வெளியிடப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று நோய் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிப்பதாகவும், உணவு மற்றும் எண்ணெய் விலைகள் அதிகரித்து வருவதால், இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க WHO தயாராக இருப்பதாகவும் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் அத்தியாவசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக WHO சுகாதார அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction