தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவின் 86 ஆண்டு கால வரலாற்றை மாற்றி,
முதல் முறையாக விலங்கியல் பூங்காவுக்குள்ளேயே பிறந்த 5 கறுப்பு அன்னப்பறவைகள் பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், அப்போது கொரோனா பரவல் காரணமாக விலங்கியல் பூங்கா மூடப்பட்டிருந்த காரணத்தினால், கறுப்பு அன்னப்பறவை குஞ்சுகளை பொது மக்கள் பார்வையிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
மூன்று ஆண் பறவைகள் மற்றும் இரண்டு பெண் அன்னப்பறவைகள் இவை ஐந்தில் அடங்கும். கறுப்பு பெண் அன்னப்பறவை, மீண்டும் நான்கு முட்டைகளை இட்டு அடைகாத்து வருகிறது என விலங்கியல் பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கறுப்பு அன்னப்பறவைகள் அவுஸ்திரேலியாவை தாயகமான கொண்டவை தெஹிவளை விலங்கியல் பூங்காவில் தற்போது 7 கறுப்பு அன்னப்பறவைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.