free website hit counter

30 நாடுகளை வென்று உலக சுற்றுலா அழகியானார் இலங்கைப் பெண்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண்ணான நலிஷா பானு (Nalisha Banu)தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30

நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் நலிஷா பானு வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப் போட்டி 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில் முதலாவது இடத்தில் இலங்கையும் ஈக்வடார் 2-வது இடத்தையும், கனடா 3-வது இடத்தையும் பிடித்தன.

அதேவேளை 22 வயதான நலிஷா பானு உலக சுற்றுலா அழகிப்பட்டத்தை காட்டிலும், Miss Popular மற்றும் Miss Talent பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடமே கிடைத்திருந்த போதிலும், கீரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction