free website hit counter

500 இலட்சம் பார்வையாளர்களை கடந்தது தெற்காசியாவின் பிரபலம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
500 இலட்சம் பார்வையாளர்களை கடந்தது தெற்காசியாவின் பிரபலம்.
இலங்கையின்,கொழும்பில் அமையப்பெற்றுள்ள முக்கிய அடையாளமான தாமரை கோபுரம், பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 6ம் திகதி காலை வரை, 500 இலட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்வையிட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாத்தறையில் இருந்து வந்த ஒருவருக்கு 500,000 ஆவது அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டதாகவும், அவருக்குப் நினைவுச்சின்னம் மற்றும் பரிசு வவுச்சர் பரிசாக வழங்கப்பட்டதாகவும் தாமரை கோபுர நிர்வாகத்தின் தலைவர் பிரசாத் சமரசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து 268 மில்லியன் ரூபாவுக்கும் ( 0.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தெற்காசியாவில் மிக உயரமான இந்த தொலைதொடர்பு கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் சீனாவும் 2012 இல் கைச்சாத்திட்டன. சீன நிறுவனம் ஒன்று பொது ஒப்பந்ததாரராக உள்ளது.

இக்கோபுரம் கடந்த 2022 செப்டம்பரில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

NM_SHATHIR

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction