45 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோரால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டது.
தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத் துறை பலவீனமடைந்து நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் இருக்கிறார். ஆகவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே இன்று குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாராயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.