தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அனுமதியின்றி, அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த முடியாது.
பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம், கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    