free website hit counter

நாளை நள்ளிரவுடன் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வெளியான விசேட தகவல்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க பொ த சாதாரணத் தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் மே 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction