free website hit counter

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு.
லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலைகளின் விபரமும் குறைக்கப்பட்ட விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,
400 கிராம் பால் பக்கெற் (லங்கா சதொச) ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1350 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும். 1 கிலோ சோயா மீட்டின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 660 ரூபாவாகும்.

1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுன் அதன் புதிய விலை 129 ரூபாவாகும்.

1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 239 ரூபாய் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: