free website hit counter

நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செயற்பட்டு கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்தில் 30 மில்லியன் ரூபாயை முதலீடு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முறைப்பாட்டின் சாட்சி விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதி சாட்சி விசாரணையின்றி பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக இதற்கு முன்னர் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.

இதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இந்தக் கோரிக்கை தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula