இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,464 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 156 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 5,620 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மரணமடைந்த 156 பேரில், 87 பேர் ஆண்கள், 69 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    