இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 39 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் தீக்ஷனா 2 விக்கெட், ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் தசுன் ஷானக மட்டும் ஓரளவு போராடினார்.
நிசங்கா 27 ரன்னும், அசலங்கா 26 ரன்னும் எடுத்தனர். ஷானக கடைசிவரை போராடி அணியை வெற்றிபெறச் செய்தார்.
இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஷானக 54 ரன்னுடனும், கருணரத்னே 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக தசுன் ஷானகவும், தொடரின் நாயகனாக ஆரோன் பிஞ்சும் தெரிவு செய்யப்பட்டனர்.