ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.
இந்நிலையில், கிரிக்கெட் விதிமுறைகளில் கடந்த வாரம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விதிகள் வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.அவற்றில் சில குறிப்பிடும்படியான புதிய விதிமுறைகள்:-
கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உமிழ்நீர் பயன்படுத்தி பந்தை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறையை நிரந்தரமாக ஆக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
களத்தில் இருக்கும் ஒரு வீரர் ஆட்டமிழந்தவுடன், புதிதாக உள்ளே வரும் வீரர் தான் இனிமேல் ஸ்டிரைக்கில் நிற்பார். அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார்.
மன்காட் முறையில் ஆட்டமிழந்தால் அது ரன் அவுட் என கணக்கில் கொள்ளப்படும்.
ஆடுகளத்தில் ஃபில்டிங் நிற்கும் வீரர்கள் தேவையின்றி இடமாறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும்.
பௌலிங் செய்யப்பட்ட பந்தானது வீரர்கள், மைதானத்திற்குள் நுழையும் விலங்குகள் மற்றும் கமெரா ஆகிய எவற்றின் மீதுபட்டு தடுக்கப்பட்டாலும் அந்த பந்து நோ-பாலாக கருதப்படும், என்ற புதிய விதிமுறைகளுக்கு எம்.சி.சி அனுமதி வழங்கியுள்ளது.