free website hit counter

சிங்கம் களமிறங்கிடுச்சி - ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாத்திரம் கடந்த காலங்களில் விளையாடிவந்த லசித் மாலிங்க ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பயிற்றுவிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை காட்டிவருகின்றார். இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில், இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், IPL தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர் (170 விக்கெட்டுகள்) என்ற பெருமையை கொண்டுள்ள லசித் மாலிங்கவை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி குழாத்தில் இணையும் இரண்டாவது இலங்கையராக லசித் மாலிங்க இடம்பிடித்துள்ளார். ஏற்கனவே, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் நிறமான பிங்க் நிற உடையுடன் மலிங்கா இருக்கும் புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும் மலிங்கா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் என தெரிவித்துள்ளது.

பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மலிங்காவின் பதிவில், மீண்டும் ஐபிஎல்லுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக திரும்பியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மலிங்கா மீண்டும் ஐபிஎல்லுக்கு பயிற்சியாளராக திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction