இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை வெகுவாக வெளிக் காட்டிக் கொண்டு வரும் அணியான வங்க தேசம் இன்று வியாழக்கிழமை டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் பலப் பரீட்சை நடத்தியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது.
50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டு இழப்புக்கு 381 ஒட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றது பேட்டிங்கில் அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னெர் 166 ரன்களையும், உஸ்மான் கவஜா 89 ரன்களையும், ஆரோன் ஃபின்ச் 53 ரன்களையும் குவித்தனர். பதிலுக்கு துடுப்பாடிய வங்க தேச அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 333 ரன்களை மாத்திரமே பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா 48 ரன்களால் வெற்றி பெற்றது.
வங்க தேச அணி சார்பாக துடுப்பாடிய முஷ்ஃபிகுர் ராஹிம் 102 ரன்களையும், தமிம் இக்பால் 62 ரன்களையும், மஹ்முதுல்லா 69 ரன்களையும் குவித்தனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், நாதன் கௌல்டர் நிலே மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
நாளை வெள்ளிக்கிழமை இங்கிலாந்து, இலங்கை அணிகளும், சனிக்கிழமை இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும் பலப் பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.