15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா மற்றும் முகமதுல்லா களமிறங்கினர். இவரும் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்கள்) அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியளித்தனர்.
அடுத்து களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்திய வீரர் புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சட்ரன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அதேவேளை சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவானார்.