இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் வேல்ஸ் சமுதாயத்திற்கு கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் (BAME) பங்களிப்புகள் மற்றும் இனம் குறித்து கற்பிக்கப்படும் என்று நாட்டின் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மாற்றம் வேல்ஸில் உள்ள இளைஞர்களை "தகவலறிந்த மற்றும் நெறிமுறை குடிமக்களாக" மாற்ற உதவும் என்று அமைச்சர்கள் நம்புகிறார்கள்.
இதன் தொடர்பாக பள்ளிகளில் கருப்பு மற்றும் ஆசிய இன வரலாறு எவ்வாறு கற்பிக்கப்பட்டது என்பதையும், வேல்ஸில் கல்வித்தாக்கங்கள் இன சமத்துவமின்மையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆராய அரசாங்கத்தால் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து அச் செயற்குழுவின் தலைவரால் ஆராயப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அதில் அங்கு வாழும் குறிப்பிட்ட BAME போன்ற சில சிறுபான்மை சமூகங்களின் வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிய ஒரு பாடத்திட்டத்தாலும், கடந்த கால மற்றும் நிகழ்கால சமூகங்களின் பங்களிப்புகள் அற்ற ஒரு கல்விமுறைமையே அச் சமூகங்களை சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் கற்றுவந்துள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் வேல்ஸின் இனரீதியாக வேறுபட்ட சுயவிவரத்தை அவை போதுமானதாக பிரதிபலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கல்வி ஊழியர்களில் முன்மாதிரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் குறிப்பிட்டப்பட்டது.
இதனையடுத்து எவ்வாறாயினும், கடந்த மற்றும் தற்போதைய வேல்ஸில் BAME சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் அனுபவங்களையும் பங்களிப்புகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளதுடன் வரும் 2022 முதல் இப் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தைத் தொடர்ந்து 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த உலகளாவிய பிளாக் லைவ்ஸ் மேட்டர் போராட்டங்களைத் தொடர்ந்து, கருப்பு இன வரலாறு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவத்தைப் பற்றி பள்ளிகளில் எவ்வளவு குறைவாக கற்பிக்கப்படுகிறது என்பது பற்றிய ஒரு விவாதம் தொடங்கியது குறிப்பிடதக்கது.