உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, தன்னார்வ தொண்டும் போதைப்பொருளும் ஒன்றுதான் என்கிறார்கள். ஒரு மனிதன் மன ஆறுதல் அல்லது வலி நிவாரணிக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிறான் எனில் அது போன்றுதான் ஒருவர் தன்னார்வத்தொண்டுகள் செய்வதும் அமைகிறதாம்.
அண்மையில் தன்னார்வத்தொண்டு புரிவோர்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில ஆச்சரியமான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டிருகிறது. நாம் நமது தயை புரியும் செயலை விரிவுபடுத்தி, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கும் அல்லது ஒரு அர்த்தமுள்ள அமைப்பில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் பட்சத்தில் அதன் பின்னரான நமது மனநிலையில் நிகழும் மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாம் ஒருவருக்கு உதவி புரிய எண்ணி செயற்படுத்தும் போது நம் மூளையில் எண்டோர்பின்ஸ் எனப்படும் இரசயாணம் வெளியிடப்படுகிறதாம். இந்த எண்டோர்பின்ஸ் எனப்படுவது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்குள் சுரக்கும் ஹார்மோன்களின ஓபியேட் புரதங்களின் ஒரு குழு. இது பல உடலியல் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இதனால் வலி நிவாரணி விளைவு ஏற்படுகிறது. அதாவது இவை தொண்டாற்றும் மக்களின் உடலுக்குக் கிடைக்கும் இயற்கையான வலி நிவாரணி மருந்துகள் என அனுபவபூர்வமான உண்மையாக நிருபிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மூளை ஸ்கேனிஸ் முறை ஆய்வொன்றில் ஒருவர் உணவு அல்லது பாலியல் சிந்தனைகளை நினைக்கும் போது எப்படி அவரது மூளையின் இன்ப பகுதிகள் ஒளிர்கின்றனவோ அதே போன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் செயலும் இன்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறதாம்.
பொதுவாகவே தயவின் செயல் நமது மன அழுத்தத்தை குறைக்க வல்லது. அதோடு மிகக் குறைவான மன அழுத்தம் ஆபத்தான இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. ஆக எவ்வகை உதவியாகியாகிலும் - பெறுபவரும் தருபவரும் அடைவது வெற்றி வெற்றிதான்.