தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் டிரெய்லரை, சற்று வித்தியாசமாக அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் Twitter Unlock மூலம், நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
 
																						 
														 
     
     
    