அமைதி, மகிழ்ச்சி மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றைக் கலந்து ‘SOL’- எனும் புதிய தமிழ் பாப் சிங்கிள் பாடலை; பாடகர் சித் ஸ்ரீராம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
இந்திய திரை உலகில் பிரபலமான சித் ஸ்ரீராம் அண்மையில் அவரே எழுதி, இசையமைத்து, தயாரித்து, புதிய பாடல் ஒன்றை அவரது தளத்தில் வெளியிட்டிருந்தார். அட்லாண்டாவைச் சேர்ந்த வெற்றி இயக்குநர் Mike Will-Made It இன் கூடுதல் தயாரிப்புடன், இந்தப் பாடல் காதல் மற்றும் பிரதிபலிப்பின் துடிப்பான கொண்டாட்டமாக விவரிக்கப்படுகிறது.
பரதநாட்டியத்தை ஹிப்-ஹாப்புடன் கலப்பதில் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடனக் கலைஞர் உஷா ஜெய் மற்றும் அவரது குழுவினர்; இப்பாடல் காணொளியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.