free website hit counter

மறைகள் யாவும் நன்னெறி காட்டுமே

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதங்கள் யாவற்றிலும் அவை கூறும் மறைகளும் ஒரே வகையான குறிக்கோளையே சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் கூறும் மறைவேதங்கள் எல்லாமே மனிதர் யாவரும் எப்படி வாழவேண்டும்.

எவ்வாறு நன்னெறி வழிசெல்ல வேண்டும் அதனால் பெரு நன்மையை எவ்வாறு அடையலாம். எனும் கருத்தை நாம் வணங்கும் முறையை அவை சொல்லிக்காட்டி நிற்கின்றன. இந்துவானாலும், கிறிஸ்தவரானாலும், இஸ்லாமியரானாலும், பெளத்தரானாலும் அவரவர்க்கென்ற முறமையை கடைப்பிடித்து மதங்களின் வழி கடைப்பிடித்து துன்பம் நீங்கி பெரு வாழ்வுவடைகின்றார்கள். "கடவுளை நேசி உண்மையான மனதோடு, உள் ஆத்மாவோடு, முழு இதயத்தோடு அவனிடம் மன்றாடு, அவன் இரங்குவான் உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும்" இவ்வாறு ஏசுபிரான் புலன்களை அடக்கி மனத்தினை ஒரு முகப்படுத்துமாறு பைபிளில் கூறியிருக்கிறார்.

அடுத்து புத்தபிரான் கூறுகிறான் அளவற்ற ஆசையே உன் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் ஆகவே ஐம்புலன்களால் ஏற்படும் அளவுக்கதிகமான ஆசைகளை தவிர்த்தால் தேவையானதை இறைவன் தருவான் என்று பெளத்தமதத்தில் கூறியிருக்கிறார். இறைவன் எல்லாவற்றையும் அளவோடு அழகாகப் படைத்திருக்கிறார். மனித உயிர்களுக்கு ஆறறிவு படைத்துள்ளார். இரு கண்ணால் நல்லதைப் பார்க்க வேண்டும், இரு காதால் நல்லதைக் கேட்கவேண்டும், இரு மூக்குத்துவாரங்களினால் நல்ல காற்றையும் நறுமணங்களையும் சுவாசித்து கெட்டதை வெளிடவேண்டும் என்று படைத்து விட்டு வாயைமட்டும் ஒன்றாக ஏன் படைத்தார். அளவோடு உணவை உண்ண வேண்டும், அளவோடு பேச வேண்டும் ஆறாவது அறிவான பகுத்தறிவை பயன்படுத்தி நல்லதை எண்ணி நல்லதை செயல்படுத்த வேண்டும்.

அடுத்து. இந்த மாதம் ரம்ழான் மாதம் முஸ்லீம் மதத்தவர் நோன்பு நோற்று ரம்ழான் மாதத்தில் பண்டிகை கொண்டாடுவர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானது இந்த நோன்பாகும் ஒரு மாதம் நோன்பு நோற்பர் பிறை கண்டே நோன்பு துறப்பர். ஆதாமின் புத்திரன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கானது,ஆக இந்தநோன்பு நோற்பது மட்டும் எனக்கே உரியதாகும் என அல்லாஜ் கூறியிருக்கிறார் என இறைதூதரான நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் அல்குர் ஆன் எனும் அருள் மறையில் அல்லாஜ் உங்களின் முன்னோர்க்கு விதியாக்கப்பட்டதைப்போன்று உங்களுக்கும் இன்நோன்பு விதிக்கப்பட்டுள்ளது என்று உரைக்கப்பட்டுள்ளது. ஐம்புலன்களை அடக்கி ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதே நோன்பின் பிரதான கோட்பாடாகும். இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். ஆகவே புனித ரம்ழானின் நோன்பு நோற்று அல்லாவின் அருளை பெற இஸ்லாமியர் இந்நோன்பினைப் கடைப்பிடித்து உய்வார்கள் என்பது திண்ணம்.

ஆகவே எம்மை ஆட்டிவைக்கும் புலன்களைஅடக்கும் உபாயம் விரதங்களில் உள்ளது. அதனை மேற்கொண்டு அதன்படி ஒழுகி வரவேண்டும் இல்லை எனில் எம்மை ஆட்டிவைத்து கெட்டிடும் சூழலுக்கு தள்ளி ஆப்பிலிட்ட குரங்கைப் போல் உள்ளேயும் இருக்கமுடியாது.அதைவிட்டு வெளியேயும் வரவிடவிடாது செய்துவிடும். நல்லநூல்களைக் கற்றும் சமயங்களில் கூறும்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டும் நல் எண்ணங்களை உருவாக்கி எம்மைக் கட்டுப்படுத்திடலாம். உலகில் வாழ்கின்ற மனிதர் மதக்கொள்கைகளை பின்பற்றிட இச்சமயமங்களே  நன்னெறியில் ஒவ்வொருவரையும் இட்டுச் செல்லும். ஆகவே ஒற்றுமை காண்பதற்கும் சுபீட்சம் உண்டாகவும் யாவையும் கற்றுணர்வோம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction