free website hit counter

ஐயப்பன் வழிபாட்டு மகிமை

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அகிலம் யாவும் அன்பையும் பண்பையும் பரவி என்றும் எம்முடன் வாழ்கின்ற உயிர்ச் சக்தியை எல்லார்க்கும் தரவல்லவர் இறைவராவர். அந்த சக்திதர வல்ல இறைவன் சிவமாக .கர்த்தராக. நபிகளாக. அவரவர் வணங்கும் தெய்வங்களில் அருள் நிறைந்து விளங்குகிறார்.

அருவமாக, உருவமாக. அருவுருவமாக தொற்றமளிக்கின்ற கடவுள்கள் பலவிதமாக எமக்கு அருள்வழிகாட்டுகின்றனர். அருவம் என்றால் தெய்வம் உண்டெனினும். உருவம் எனும் தோற்றம் இல்லாது இருந்து மனிதரின் அதீத நம்பிக்கையில் தெய்வ கடாட்சத்தை அள்ளி வழங்குவது.

அடுத்ததாக உருவ்ம் அவரவர் இஸ்ட தெய்வம் உருவில் வழிபாடு செய்து வேண்டியதை கேட்கும் போது வேற்றுருவில் உதவுவது. அடுத்ததாக அருவுருவம் இருக்கிறாரா, இல்லையா எனும் இக்கால மானிடரின் கடவுள் பற்றிய அறிவுக்கு தெய்வம் தெளிவு காட்டும் நிலையாகும்..,
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நம்பிக்கை இருத்தல் அவசியமாகும். வாழ்வை மேம்பட வைப்பதற்கு அது பெரிதும் உதவும். நாம் கடவுளை நெருங்க நம்பிக்கையும், உண்மையும், அன்பும், மிகமிக அத்தியாவசியமாக தேவைப்படும். உண்மையாக இல்லாதவர்களிடம் இறை சக்தி உண்டா இல்லையா எனும் கேள்வியே எழும். அதேபோல் அன்பில்லாதவரை, இரக்கமிலாதவரை இறைவனும் நெருங்கமாட்டான் எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பிக்கை இருந்தால்தான் தெய்வம் காட்சி கொடுப்பார். எந்த உருவிலும் எந்த வழியிலும் ஏதோ ஒரு பொருட்டாகவும் அச்சக்தி எமக்கு கிடைக்கும்.

தெய்வம் உண்டு என்னும் நம்பிக்கை உள்ளவர்க்கு இறைவன் உண்டு. இல்லாதவர்க்கு இறைவனும் இல்லாது இருப்பான்..நம்பும்போது அருள்தருவான்.  அதுவே அருவுருவ நிலை. இருப்பது போல் இல்லை, இல்லாதது போல் இருப்பார்.

ஐயப்பாசரணம்!

கடவுள் என்னும் சொல்லே எம்மைக் கடந்து உள்ளே இருக்கிறார் என்பதே அர்த்தம், எம்மனதின் ஆழமாக உள்நின்று ஒளிர்வார். அவர் எமது கண்ணுக்கு தெரிவதில்லை. மனச்சாட்சியாக விளங்குவார். உண்மையாக அன்பாக,கருணையுடன் வாழ்பவர்களிடம் நீக்கமற நிறைந்து காண்கிறார். சாதி மத பேதமின்றி எல்லாருக்கும் உதவும் வகையில் இறைசக்தி ஒவ்வொருவருக்கும் உயிர் ஆக அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் மறந்து விட்டு பெரியவன் சிறியவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் அறிவுள்ளவன், அறிவற்றவன் என்ற பாகுபாட்டால் பிரிந்து நிற்கிறோம் ,இறை தந்த உயிரை மதிப்பது இல்லை..அவமதிக்கிறோம். தலைதாழ்த்தி வணங்காது தலைவீழ்த்தி வெட்டுகிறோம்.

அறிவு எல்லோருக்கும் ஒன்றுதான், அவரவர் அதை வளர்த்துக் கொள்ளும் முறையிலேயே எல்லாம் அடங்குகிறது. மாதா பிதா குரு தெய்வம் இவர்கள் பெற்றவர் வளர்த்தவர், அறிவைப்போதித்தவர், வணங்கப்படுபவர். அன்பு பாசம் காட்டதாய் தந்தை அறிவு கல்வி உபதேசம் பெற குரு எதையும் மதித்து வழிபட தெய்வம் இந்த நான்கு பேருக்குள்ளும் உலகம் மக்கள் வாழ்க்கை அடங்குகிறது. ஆகவே ஐம்புலனையும் அடக்கி எல்லாவிதத்திலும் மேன்மை அடைந்திட தெய்வ வழிபாடு முக்கியமாக கருதப்படுகிறது.

எம்முன்னோர்கள் வழிபட்ட ஒவ்வொரு வழிபாட்டுக்கும் காரணமும் உண்டு ,பொருள் பொதிந்த தத்துவங்களும் அதற்குண்டு. ஆசாரத்தன்மையுடன் கூடிய உயிரோட்டமான வழிபாடுகளை மேற்கொண்டனர். அதனால் பெரும் பயனைப் பெற்றனர். தத்துவம் என்றால் உண்மை எனப்பொருள் படும், அப்படிப்பட்ட தத்துவாதீனாக விளங்கப் பெற்றவனே சுவாமி ஐயப்பன். அவரைத்தரிசிக்க சபரிமலை யாத்திரை கார்த்திகைமாதம் முதல் மாலையணிந்து நேர்த்தியாக நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் அனுஸ்டித்து பஐனை பாடி ஐயப்பன் சரணம் பாடி இருமுடி கட்டி மலைக்குச் செல்வர். ஐயப்பனை தரிசிக்க எல்லாரும் செல்வர். பதினெட்டுப் படிகடந்து சபரிகிரீசனை வணங்குவார்க்கு அவர் வினையாவும் தீரும். என்பது ஐதீகம்.

பதினெட்டுத்திருப்படியிலும் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது அஸ்டாதச சித்திகளைக் குறித்து நிற்கும் இப்பதினெட்டு எனும் எண் ஜெயமாகிய வெற்றியைத் தரத் தக்கதாகும்.. பஞ்சேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும்,தன்மாத்திரைகளாகிய ஊறு, சுவை,ரூபம்,நாற்றம்,ஓசை என்ற ஐந்தும்.அந்தக்கரணங்களான மனம் புத்தி,சித்தம்.அகங்கார்ம் எனும் நான்கும் மலங்களாகிய ஆணவம் கன்மம்,மாயை என்ற மூன்றும், ஆன்மா என்பதையும் சேர்த்து பதினெட்டு விடயங்களைக் கொண்டதாக இப்பதினென்படிகளும் குறித்து நிற்கின்றன. மனிதர் ஐம்புலன்களை அடக்கி கட்டுப்பாடாய் உண்மையாய் வாழவேண்டும். மாயமாகிய உலகில் மாழாது தூயவராய் அவர் ஆன்மா பரிசுத்தம் அடைந்திட இறைநாமம் ஜெயிக்க வேண்டும் அதுவே நல்வழியில் அவர்களை இட்டுசெல்லும். வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இன பேதமின்றி ஐயப்பனை வழிபடுவோம். சாமி சரணம்..

நன்றி, 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula