நீங்கள் அனைவரும் யோகாசனம், அக்ரோபட்டிக்ஸ் (Acrobatics) மற்றும் மசாஜ் (Massage) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இவை மூன்றும் இணைந்த கலை அல்லது ஆரோக்கியத்துக்கான பயிற்சியான ஆக்ரோயோகா (Acroyoga)பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.
ஆனால் மேற்குலகில் தற்போது பிரசித்தமான இக்கலை இணையத்தளம் மூலமும் கடந்த பல வருடங்களாக பலருக்கு நல்வழி காட்டி வருகின்றது.
ஆக்ரோயோகா பயில்வதற்கு பிரசித்தமான இரு பாடசாலைகள் கனடாவின் மொன்ட்ரியல் நகரிலும் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் அமைந்துள்ளன.இவற்றில் ஆக்ரோயோகா மொன்ட்ரியல் (Acroyoga Montreal) ஜெஸ்ஸி கோல்ட்பேர்க் மற்றும் எயுகெனே பொக்கு ஆகிய இருவரின் முயற்சியால் 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இவர்கள் பயிற்றுவிக்கும் ஆக்ரோயோகா, ஆக்ரோபட்டிக்ஸ், யோகா மற்றும் நடன அசைவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2006 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்ட ஆக்ரோயோகா இன்க் (Acroyoga Inc..) ஜாசொன் நேமேர் மற்றும் ஜென்னி க்லெயின் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப் பட்டது. இவர்கள் பயிற்றுவிக்கும் ஆக்ரோயோகா கலையில் ஆக்ரோபட்டிக்ஸ்,யோகா மற்றும் தாய் மசாஜ் ஆகியவை உள்ளடக்கப் பட்டுள்ளன. இவ்விரு பாடசாலைகளும் பயிற்றுவிக்கும் முறையில் சிறு வித்தியாசம் இருந்த போதும் பல செய்கைகளில் ஒத்த தன்மை காணப்படுகின்றது. மேலும் இரு பாடசாலைகளுமே இக்கலையில் தேர்ச்சி அடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றன.
அனைத்து ஆக்ரோயோகா பயிற்சிகளிலும் பொதுவாக 3 அம்சங்கள் காணப்படுகின்றன. அவையாவன:
1.தளம் (Base)
2.மிதப்பவர் (Flyer)
3.தாங்குபவர் (Spotter)
வருங்காலத்தில் அதிக முக்கியத்தும் பெறக்கூடிய 'ஆக்ரோயோகா' கலை குறித்த மேலதிக விபரங்களை பின்வரும் அதன் இணையத்தள முகவரியினை அழுத்துவதன் மூலம் அங்கு சென்று பார்வையிட முடியும்..
http://www.acroyoga.org