ஆதி அந்தம் இல்லாத ஒருவனாய் விளங்குவான் இருநிலனாய் உலகப்பொருள்களில் உள்ளதாகவும் இல்லாமலும் தெரிவான்.
மும்மூர்த்தியாயும் இருப்பான். நால்வேதங்களாயும் உரைப்பான். ஐம்பூதங்கள் தீகாற்று நீர் ஆகாயம் பூமி ஆகிய ஜம்பூதங்களாயும் தோற்றுவான். காலங்கள் ஆறாயும் மாறுவான். சப்தஸ்வரங்கள் ஏழாயும் இசைப்பான். ஆன்மா ஞாயிறு திங்கள் பஞ்ச பூதங்கள் ஐந்தும் சேர்ந்து எண்குணத்தினனாயும் தெரிவான். அப்படிப்பட்ட இறைவன் ஒன்றாயும் பலவாயும் ஆணாகிப் பெண்ணாகி சகல உயிர்களிலும் உள்நின்று ஒளிருகின்றான். நடராஜராக தில்லையம்பலத்தில் திருநடனம் ஆடிக்கொண்டே எம்மையும் ஆட்டுவிக்கிறான்.
நேற்றாக இன்றாக நாளையுமாக ,நடந்தது நடக்கின்றது, நடக்கப்போவது எல்லாமே அறிந்த கூத்தன் அவ்வீசன் எம்மை ஆட்கொள்ள நாம் மனம் வாக்கு காயம் மூன்றினாலும் தூய அன்போடு வழிபடவேண்டும். மனம் அதை அலைக்களிக்காது இறைவனை நமதுள்ளத்தில் நிலை நிறுத்தவேண்டும். வாக்கு என்பது எமது வாயினால பாடித் தொழுவது. வேதங்களாலும் தேவாரங்களாலும் பஜனை பாடல்களாலும் உருகிப் பாடி இறைவனை வழிபடவேண்டும். காயம் அதாவது எம் உடலால் கைகளால் இறைவருக்கு அபிசேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்தும் பூமாலை சாற்றியும் ஆடை அலங்காரம் செய்தும், ஆரத்தி செய்தும் வழிபடுவது.
விபூதிக் காப்பு ,சந்தனக்காப்பு ,குங்குமக்காப்பு, இட்டு வழிபடுவது. இதைவிட அன்னாபிசேகம் செய்தும் வழிபாடாற்றலாம். கற்பூரச்சட்டி ஏந்தி ஆலய வீதிவலம் வரலாம். நாக்கில் அலகு பாய்ச்சி நெஞ்சில் முதுகில் அலகு பாய்ச்சி காவடிகள் எடுக்கலாம். முள்காவடி காவடிகள் தோளில் ஏந்தி ஆலய வீதி சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தலாம். பால்குடம் தலையில் சுமந்து வந்து இறைவனுக்கு அபிசேகம் செய்யலாம். அடிப்பிரதட்சினம் செய்யலாம். அங்கப்பிரதட்சினம் செய்யலாம் இப்படி மெய் வருந்திச் செய்யும் வழிபாடுகளுக்கு எல்லாம். இறைவன் அருள் தருவான்.
ஆட்டிவைத்து அசைய வைத்து இயங்க வைக்கும் கூத்தனிடம் நாம் அதிக பற்றுக் கொண்டு பூசைகள் வழிபாடுகளை செய்யலாம். அப்போது நாம் துன்பவெள்ளத்தில் அடித்துச் செல்லாது இன்பவெள்ளத்தில் மிதந்து செல்லாம். நாம் எமது மனக்குறைகளை நடராஜப்பெருமானுக்கு நித்தமும் பூஜைகளாற்றும் அந்தணர்களிடம் கூறுவோம். இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாகத்திகழ்ந்து எமது குறையை இறையருளில் நிறைவாக்குபர்கள் அந்தணசிவாச்சாரியர்களே, அவர்கள் எமது மனப்பாரத்தை இறைவனிடம் சென்று சேர்ப்பர். அவனும் இரங்கி துன்பத்தை போக்கி யருளுவான். நாமும் நம்பிக்கை துணை கொண்டு துதி செய்ய வேண்டும்.
ஆகவே வேதம் ஓதி மெய்யன்புடன் பூஜைகளாற்றும் குருவானவர்கள் அத்தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களும் தமது ஆசாரங்களை முறைப்படி அனுசரித்து பூனூல் தரித்து பிரம்மவுபதேசம் பெற்று காயத்ரி ஜெபம் முறைப்படி உச்சரித்து தெய்வத்தொண்டு புரிபவர்கள். வேதத்தை ஓதி இறையை ஆராதிப்பவர்களாக இருப்பர். அந்தணசிவாச்சாரியார்கள் ஆசார்ய அபிசேகம் செய்யும் காலத்தில் அவர்களுக்கு அதாவது குருப்பட்டம் பெற செய்யும் சாந்தி ஓமம் அபிசேகம் செய்தபின் முறைப்படி ஆராதனை பூஜைகளில் சிவவழிபாடு முக்கியமாகும்.
அதில் பஞ்சலிங்கங்கள் அரிசி மஞ்சள் மாகோலத்தினால் சுற்றி அமைக்கப் பட்டிருக்கும். ஆசாரியார் குருப்பட்டம்பெற தனது ஈசானபதவி எதுவென கண்களை மூடிக்கொண்டே மலரிணை போட அப்பூ எந்தஈசன் மேல் விழுகிறதோ அதுவே அவரது பதவியாக நிர்ணயம் செய்து அவருக்கு அபிசேகம் செய்து வைத்த குருவானவர் அப்பதவியையும் குருப்பட்டத்தையும் அளித்த வாழ்த்துவார்கள். ஈசானம் ,தற்புருசம் ,அகோரம் ,வாமதேவம் ,சத்தியோதாசம்.எனும் ஐந்து முகங்களின் பெயர்கொண்டு அவ் ஆசார்யர்கள் திகழ்வர்.
இப்படி சிவனின் பெயர் கொண்டு இறை தொண்டுகளை ஆலயங்களில் செய்து தெய்வத்தோடு மிக நெருக்கமாக உறவாடும் சிவாச்சார்யர்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாக மிளிர்வர். மக்கள் குறைகள் எதுவுமின்றி வாழ . ஈசனிடம் மன்றாடி வேண்டுவர். அவர்களும் முறையாக சிவ தீட்சை.பெற்றவராயும் பூனூல் தரித்த மகரிசிகள் கோத்திரத்தில் வந்தவராயும் பிராம்மண குலத்தில் உதித்தவராயும் சந்ததி சந்ததியாக குருவாக இருந்து இந்து ஆலயங்களில் பூஜிப்பவராயும் விளங்குவர். ஆச்சார்யர்களில் மிகவும் அதி சக்தி மயமானவர் என்று குறிப்பிடக்கூடியவர் இறை அவதாரமாகத்திகழ்ந்தவர் பதஞ்சலி முனிவர் என்று கூறலாம் அவர் நடராஜப்பெருமானின் திருநடனத்தை எப்போதும் தரிசிக்கும் பேறு பெற்றவர்.அவர் வரலாறு அதி அற்புதமானது.
ஆதியில் ஶ்ரீ சிதம்பரத்தில் நடராஜமூர்த்தியானவர் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாராம்,அப்போது தனது உடுக்கையை பதினான்கு தடவை சப்திக்கச் செய்ய அந்த பதினான்கு ஸப்தங்களும் சூத்திரங்களாயினவாம். அச்சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டே பாணிநீ எனும் மகரிசி வியாகர்ணசாஸ்திரம் இயற்றினாராம். அவ்வியாகர்ணசாஸ்திரத்திற்கு விற்பன்னர் யாராலும் பொருளை ஆராய்ந்து அறிய சாத்தியமில்லாமற் போயிற்றாம் இதைக்கண்டு தாண்டவம் ஆடிய ஈசன் ஆதிசெசனான தமது பாதச்சலங்கையை சல் சல்லென்று ஆட்டுவித்தாராம்.அதற்குப் பிறகும் தமது பாதச்சலங்கைகள் சப்தத்திற்கு தாமே பொருள் கூற்வேண்டி அந்த ஆதி சேசனையே பதஞ்சலி மகரிசியாகய் அவதரிக்கச்செய்தாராம். ஆடும் ஆனந்தன் கூத்து ஆடிக்கொண்டே வேதங்களை எப்படி வழங்கியுள்ளான்.
இப்பதஞ்சலி மகரிசி இலேசுப்பட்டவராக நினைத்துவிடாதீர்கள் அவர் எத்தனைபெரியவர் வியாகர்ண சாஸ்திரத்திற்கு பாஸ்யம் இயற்றிவிட்டு அதைச் சிதம்பரத்திலே தனது ஆயிரம் முகங்களின் வழியே ஆயிரம் சிஸ்யர்களுக்கு உபதேசம் நாளந்தம் பண்ணிக்கொண்டுவந்தாராம்.
ஆதிசேசனாகிய பதஞ்சலிமுனிவர் ஆயிரம் முகங்களுக்கு ஊடாக ஆயிரம் சிஸ்யர்களுக்கு உபதேசித்துக் கொண்டு இருந்தாராம். அப்படி உபதேசித்து வரும் காலத்தில் தனது மூச்சுக்காற்றுஅதில் இருந்து உண்டாகும் நச்சுகாற்று சிஸ்யர்களைத் தாக்காது இருக்க ஒருதிரையினுள் மறைந்தே இருந்து உபதேசித்தவண்ணம் இருந்தாரம் ..அத்திரையை ஒருவரும் திறக்காமலிருக்கும் படி ஆக்ஞை பிறப்பித்தும் இருந்தாராம்..தாம் உள்ளிருந்து உபதேசிக்கும் கால் யாரேனும் ஆக்ஞையை மீறி நடப்பின் அவர்கள் பிரம்மாச்சவ் ஆவார் என்று ஆனையுமிட்டிருந்தாராம்.
இவ்வாறு பாஸ்யம் உபதேசம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் சிஸ்யன் ஒருவன் சபல புத்தியினால் குருவானவர் எப்படிப்பட்டவர் எந்த அவதாரத்துடன் வசிக்கிறார் என அறியவில்லையாம். எப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் சிஸ்யர்களுக்கும் தனித்தனியே எவ்விதம் பாடம் சொல்கிறார். என அறிய முற்பட்டானாம். அதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா சிஸ்யன் ஆவலுடன் அத்திரையை விலக்கினானாம். விளைவு ஆதிசேசனின் விசக்காற்று ஸ்பரிசத்தால் அனைவரும் எரிந்து சாம்பலாகி விட்டனராம்..இதைக்கண்ட பதஞ்சலி முனிவர் மிகுந்த கவலை கொண்டாராம். அவர் என்ன செய்வது என வாடிநிற்கும் தருணத்தில் குருவின் அனுமதியின்றி வெளியே சென்றிருந்த இன்னுமொரு சிஸ்யன் ஆசார்யார் என்ன சொல்வாரோ எனப் பயந்து கொண்டே அங்கு வந்து தனது சகமாணவர்கள் சாம்பலாகிப் போயிருந்ததைப் பார்த்து திகைத்து நின்றானாம். குருவோ ஒருவனாவது பிழைத்தானே என மகிழ்ந்து வியாகர்ண சாஸ்திரத்தின் பாஸ்யம் [;பொருள்] ஒருவனுக்காகவாது உபதேசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என ஆனந்தித்தாராம்.
ஆனாலும் உபதேசிக்கும் போது தனது கட்டளையை மீறிசென்றதால் அவனுக்கு பிரம்மாச்சவ் எனும் சாபத்தை இட்டு என்னிடம் கற்ற வித்தையை நல்ல அர்க்கமான ஒரு சீடனுக்கு உபதேசிக்கும் போது இச்சாபம் நீங்கும் என்று கூறி சென்று விட்டாராம். கெளடபாதர் என்ற அச்சீடரும். பிரம்மராசவ்வாக மாறி நர்மதா நதிக்கரையின் அரசமரத்தில் இருந்தார். அந்நதிக்கு வரும். அருகர்களை தனது உபதேசத்துக்கு பரீட்சிக்க அழைப்பாராம். அவர்களிடமிருந்து சரியானபதில் வரவில்லை என்றால் அவர்களை பிடித்து விழுங்கி விடுவாராம். இப்பாடியேசில காலம் சென்றது. அவரிடம் சீடராகி உபதேசம் பெற யாரும் வராததால் சாபவிமோசனம் நீங்காது இருந்தாராம்.
மீண்டும் ஆதிசேசன் அம்சத்தில் ஒருபிரம்மணோததமரை அவதரிக்கச்செய்தாராம். அவரே சந்திரசர்மா எனவும் கோவிந்த பகவத்பாதர் எனவும் அழைக்கப் பட்டாராம். கெளடபாதரின் சாபவிமோசனம் நீங்க சிஸ்யனாகி உபதேசம் பெற்றாராம்..கோவிந்த பகவத்பாதர் தான்பெற்ற வியாகர்ண சூக்தமும் அதன் பாஸ்யத்தினையும் ஶ்ரீ சங்கரருக்கு பின்நாளில் குருவாக இருந்து உபதேசித்தாராம். எமக்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிசம் ஆனந்தத்தாண்டவம் ஆடிய நடரஐப் பெருமான் சலங்கையை அசைத்து அதை இசைத்து அதில் வேதங்களாய் சப்திக்க செய்தார். தாமேஅவதாரமாய் அதை உபதேசிக்கச்செய்தார் வேதத்தின் பொருளை மூச்சுக்காற்றில் உபதேசிக்கவும் செய்தார குரு சிஸ்யர் பரம்பரையாக வேதங்களும் அதன் தாற்பரியங்களும் மாறிடாது மறைந்திடாது இருக்க இறையே மீண்டும் அவதரித்து மறைகளால் மதம் மறையாது ஒளிபெறச்செய்தார். என்னே அவன் கருணை. என்றும் மறவாது அவன் தாள் பணிவோம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : அருந்தா