free website hit counter

யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர்  பூரணம் அடைந்தார் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது  குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  01.05.2025 இரவு 9 .40 மணியளவில்  சிவசாயுச்சியம் பெற்றார்.

இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் சாயுச்சியம் பெற்றதாகத் தெரிய வருகிறது. சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்  ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அன்று ( 02.05.2025) மாலை பூரணத்துவ சாந்தி  நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.  

நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981இல்  பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற்றிய சுவாமிகள், யுத்த காலத்திலும் தன்னாலான பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தவர். சிறந்த மனிதநேயப் பண்பாளர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula