அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.
பொதுவாக ஹோமம் செய்வதற்கு பல மந்திரங்கள் உள்ளன. அது போல ஹோமத்தில் சமர்பிப்பிபதற்கும் சமித்துக்கள் உள்ளன இந்த ஹோமத்திற்கு இந்த சமித்து சமர்பிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.
ஹோமங்களில் அக்னி ஹோத்திரம் என்பது வித்தியாசப்பட்டது. இதனை ஔபாசனம் என்றும் கூறுவார்கள். வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, அக்னி வளர்த்து அதனை அணையாமல் காத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) ஒரு கிருஹஸ்தன் காயத்ரி மந்திரம் ஓதி செய்யும் சிறு வேள்வியாகும்.
ஹோமத்தில் இருந்து வரும் புகை நம்மைச் சுற்றியுள்ள காற்றில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க வல்லது. அஜீரணக் கோளாறு சுவாசக் கோளாறு போன்றவற்றை நீக்க வல்லது. நாள் பட்ட காயங்கள் ஆறும். சரும நோய்களை நீக்க வல்லது. சமித்துக்கள் எரிந்து வரும் ரட்சை எனப்படும் சாம்பல் தூய தன்மை பொருந்தியது. இதனை நமது வீட்டைச் சுற்றி தூவ பூச்சிகள் அணுகாது. திருஷ்டி தோஷங்கள் அணுகாது. மண்ணில் தூவினால் நல்ல உரமாகி செடி கொடிகள் நன்கு வளரும். இந்த சாம்பல் பிராண சக்தியை அதிகரிக்க வல்லது.
இத்தகைய சிறப்பு மிக்க அக்னி ஹோத்ர ஹோமத்தை, அதற்கான பக்குவத்தோடும் நம்பிக்கையோடும் தினசரி செய்யும் வெள்ளை இனத்தவர் சிலர் சுவிற்சர்லாந்தில் உள்ளார்கள். பசுஞ்சாணியிலேயே விறாட்டி தட்டி, அதனுடன் சமித்தும் அடசதையும் சேர்த்து, காயத்திரி ஜெபத்துடன் ஹோமம் செய்யும் வெள்ளையினத்தவர்கள் சிலரை நாம் நேரடியாகச் சந்தித்திருக்கின்றோம்.
அவ்வாறானவர்களில் ஒருவரது நித்ய கர்மாவின் கானொளிக்காட்சி ஆவணம்: