free website hit counter

வார ராசிபலன்கள் - ( டிசம்பர் 16 முதல் 22 வரை )

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( டிசம்பர் 16 முதல் 22 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய மாற்றங்களை நோக்கி தங்களுடைய முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.வெளிநாடு செல்வதற்கு எடுத்த முயற்சி பலன் அளிக்கும்.பெண்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். கடன் விடயத்தில் கவனம் தேவை.வாகன யோகம் சிலருக்கு கிடைக்கும்.தம்பதிகள் இடையே மகிழ்ச்சியான வாரம்.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்றவரவுகளும் உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில்விருத்தி செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றத்தை பெறுவதற்கான சூழல் அமைந்துள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளாக இருந்தாலும் வழக்கத்தைவிட கவனமாக இருக்கவேண்டும்.பெண்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டு.வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தம்பதிகள் விட்டு கொடுத்து போவது நல்லது.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி வழிபாடு

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.விற்பனை சுமாராக தான் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு திருப்தியான வாரம். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும்.

பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணை வியாபார வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். விவசாய தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நில விற்பனை அமோகமாக நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.வெளிநாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: வைரவர் வழிபாடு

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

நடக்குமா என்று நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடந்து சந்தோஷத்தை கொடுக்கும். மன மகிழ்ச்சிக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள்.பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். மாணவர்கள்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு வேலைப்பளு ஏற்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.
வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

பரிகாரம்: வாராஹி அம்மன் வழிபாடு

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

உத்யோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன்‌ விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

உங்கள் செயல்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். தொழில் முதலீடுகளில் யோசித்து செயல்படுவதுடன் உடல் நிலையில் கவனம் தேவை.பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கை அரசாங்க ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.
பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.சகோதர வழியில் நன்மை உண்டு.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 16,17

பரிகாரம்: லஷ்மி குபேரர் வழிபாடு

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

பணவரவு தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய தீவிர முயற்சி எடுக்க வேண்டும்‌.பெண்களுக்கு மன அழுத்தம் இருக்கும்.தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 17,18,19

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

தொழில் துறையில் இருப்பவர்கள் புதிய திட்டங்களை தொடங்குவதை இந்த வாரம் தள்ளி வைக்க வேண்டும். வியாபாரிகள் மந்தமான வர்த்தக நிலையை எதிர்கொள்வார்கள்.உத்தியோகத்தர்கள்  பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான வாரம் இது. மீடியாவில் இருப்பவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். பெண்மணிகள் குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடு வேண்டாம்.மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை வேண்டும். வெளிநாட்டு பயணம் சிலருக்கு அமையும். வீட்டில் சுபகாரியங்கள் நடத்த முடிவு செய்வீர்கள்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 20,21,22

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

ஒருசிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். நண்பர்கள் பற்றி இருந்த கணிப்பு மாறும். தீயவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை இருக்கும்.மாணவர்களுக்கு பொது அறிவு திறன் அதிகரிக்கும்.தம்பதிகள் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு உதவி கிடைக்கும்.

பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வு கிடைக்கும்.போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசு வழி முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும்.மாணவர்களுக்கு சிறப்பான வாரம்.பெண்களுக்கு பணியிடத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு

- 4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction